என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்
    X
    அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்

    மின்னணு வாக்கு பதிவு அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

    மின்னணு வாக்குபதிவு அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் ஆலங்குடியில் நடை பெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி பேரூராட்சி 15 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயக்கம் அலுவலர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு ஆலங்குடி பேரூராட்சி  அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலர் பழனியப்பன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆரோக்கிய சேவியர் முன்னிலை வகித்தார்.

    பின்னர் தேர்தல் அலுவலர்  இங்கு தேர்தலில் ஓட்டு செலுத்துவதற்கு மின் இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    வாக்களிக்க வருபவர்களிடம் இயந்திர பிரச்சனைகள் இல்லாமல் ஓட்டு செலுத்துவது பற்றிய விளக்கப்பயிற்சி,  வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் தான் அளித்த வாக்குகளை உறுதி செய்யும் கருவி கட்டுப்பாடு இயந்திரம் ஆகிய இயந்திரங்களை வைத்து தேர்தல் வகுப்பு ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறினர்.

    இதில் பயிற்சி  வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×