என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி - காரைக்குடி இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்

    புதுக்கோட்டை வழியாக திருச்சி & காரைக்குடி இடையே நாளை (17&ந்தேதி) மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வழியாக திருச்சி - காரைக்குடி இடையே நாளை (17-ந்தேதி) மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. 

    இந்தியா முழுவதும் அனைத்து ரெயில் பாதைகளையும் மின்மயமாக்கி அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வழியாக திருச்சி & காரைக்குடி இடையே சுமார் 90 கிலோ மீட்டருக்கு மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 

    இதற்காக தலா 1 கிலோ மீட்டருக்கு 18 மின்கம்பங்கள் வீதம் 1,620 மின்கம்பங்கள் நடப்பட்டு மின்வயர் பொருத்தும் பணி நிறைவுற்றது. திருச்சி - புதுக்கோட்டை & காரைக்குடி வரை மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நாளை (17-ந்தேதி) நடைபெற உள்ளது. 

    இதையடுத்து ரெயில் பாதையை ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் பிரத்யே ஆய்வு ரெயில் மூலம் நேற்று ஆய்வு செய்தார். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்த இவர் சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே அலுவலர்களிடம் ஆலோசனை செய்த பின்னர் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×