என் மலர்
உள்ளூர் செய்திகள்

122-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஷீபாவை ஆதரித்து மயிலை த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு
சென்னை:
மயிலாப்பூர் தொகுதியில் 122-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வா.ஷீபா வீடு வீடாகசென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ. வீடு வீடாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அவருடன் பகுதி செயலாளர் நந்தனம் மதி, வட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், நாகராஜ், வட்ட, பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
வேட்பாளர் வா.ஷீபா தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் பகுதியில் வாக்காளர்களிடம் பேசும் போது, ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 மாதத்தில் 80 ஆண்டு நன்மைகளை தமிழ்நாட்டுக்கு தந்துள்ளார். இந்த வட்டத்துக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய், உடற் பயிற்சி கூடம், பூங்காக்கள் அமைத்து தருவேன் என்றார்’. இதே போல் மயிலை த.வேலு எம்.எல்.ஏ. பேசுகையில், பொது மக்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனுக்குடன் தீர்வு காண்பேன் என்று தெரிவித்தார்.






