என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.
    X
    அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.

    அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

    அரூர் கூட்டுறவு சங்கத்தில் பருத்து ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத் தியாளர்கள் சங்கத்தில் நேற்று முதல்வார பருத்தி ஏலம் தொடங்கியது. 

    அரூர், கம்பைநல்லூர்,  கோட்டப்பட்டி  உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

     இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 290 விவசாயிகள் 1300&க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். 

    இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,709 முதல் 10,799 வரையிலும், வரலட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.11,099 முதல் 12,509வரை ஏலம் போனது.  நேற்றைய. ஏலத்தில் ரூபாய் 70 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

    Next Story
    ×