என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTE
    X
    FILE PHOTE

    கொரோனா கட்டுக்குள் வந்தததால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவார்கள் எனவும், வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    திருச்சி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 

    அப்போது தேர்தலுக்காக அத்தனையும் திறக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

    திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 700 ஐ தாண்டிய தினசரி பாதிப்பு நேற்றைய தினம் 35 பேராக சுருங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் நேற்றை தினம் 33 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    அதேபோன்று கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. 

    தேர்தல் பிரசாரம் தொடங்கும்போது தொற்று அதிகமாக இருந்தது. தற்போது பாதிப்பு சரிந்து வருவது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கிறது. 

    வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் தங்களின் ஆதரவாளர்கள் தவறாமல் வந்து வாக்களிப்பார்கள் என நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள்.

    லட்சக்கணக்கில் செலவழித்து ஓட்டுபோட மக்கள் வரவில்லை என்றால் அத்தனையும் வீணாகிவிடுமே என பயந்தவர்கள் தற்போது ஆறுதலாகி இருக்கிறார்கள்.   

    அதேபோன்று பிரசார களங்களிலும் மக்கள் அச்சமின்றி வாக்குவேட்டை நடத்தி வருகின்றனர். 

    வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் முந்தைய கால கட்டங்களை போல வாக்குப்பதிவு சதவீதமும் இருக்கும் என தேர்தல் அதிகாரிகளும், வேட்பாளர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
    Next Story
    ×