என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம்தமிழர் கட்சியினர் 60-க்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டு உள்ளனர்: சீமான் பேட்டி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொங்கலுக்கு காசு கொடுப்பேன் என்று சொல்வதும், மகளிருக்கு ரூ.1000 கொடுப்பேன் என்று சொல்வதும் வெற்று அறிவிப்புதான். கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்தவர்கள் தற்போது வட்டி கட்டி அவதிப்பட்டு வருகிறார்கள். அதை பற்றி பேச்சே கிடையாது.
தேர்தல் நேரத்தில் மிரட்டப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அ.தி.மு.க., பா.ம.க.வை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான். 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் வேட்பாளர்களை 3 நாட்கள், 4 நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இதனை சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை.இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம்.
தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல் இல்லாமல் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... நீட் விவகாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பொதுவிவாதம் நடந்தால் நானும் தயார்: அன்புமணி அறிவிப்பு






