என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
மின்சார ரெயிலில் பெண் பயணி முன்பு அநாகரீகமாக செயல்பட்ட வாலிபர் கைது
தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி இளம்பெண் பயணி முன்பு அநாகரீகமாக செயல்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
யூடியூப் சேனல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அவர் கடந்த 9-ந்தேதி இரவு 11 மணியளவில் பணி முடிந்து நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்து பயணம் செய்தார்.
பெண்கள் பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லை. இளம்பெண் மட்டும் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் பெண்கள் பெட்டிக்குள் ஏறினார்.
இளம்பெண் மட்டும் பயணம் செய்வதை கண்ட அவர், திடீரென ஆபாச செய்கையில் ஈடுபட்டு, அநாகரீகமாக நடந்தார். இதனை இளம்பெண் கண்டித்தும், தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டார்.
இதையடுத்து இளம்பெண் தனது செல்போனில் வாலிபரின் நடவடிக்கைகளை படம் பிடித்தார். உடனே அந்த வாலிபர் தனது முகத்தை மூடிக்கொண்டு குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் தப்பி ஓடிவிட்டார்.
இந்தநிலையில் அந்த இளம்பெண் வாலிபரின் அநாகரீக செயல் குறித்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவத் தொடங்கியது.
இது குறித்து அறிந்ததும் பரங்கிமலை, தாம்பரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பெண் பயணி முன்பு அநாகரீக செயலில் ஈடுபட்டது மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story