search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணப்படும். பேரூராட்சிகளில் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தென் தாமரைகுளம், மயிலாடி, அஞ்சுகிராமம், அழகப்பபுரம், மருங்கூர், புத்தளம், சுசீந்திரம், தேரூர், கொட்டாரம் பேரூராட்சிகளுக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தாழக்குடி, அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி பேரூராட்சிகளுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா  கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

    குளச்சல் நகராட்சி, கணபதிபுரம், வெள்ளி மலை, மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ரீத்தாபுரம், திங்கள் நகர், நெய்யூர், இரணியல், கல்லுக்கூட்டம் பேரூராட்சிகளுக்கு லட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    பத்மநாபபுரம் நகராட்சி, வில்லுக்குறி, கப்பியறை, முளகுமூடு, வாள்வச்சகோஷ்டம், திருவிதாங்கோடு, குமாரபுரம், கோதநல்லூர், விலவூர், வேர்க்கிளம்பி பேரூராட்சிகளுக்கு தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,

    ஆற்றூர், பொன்மனை, திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார், கடையால், அருமனை பேரூராட்சிகளுக்கு ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரியிலும், 

     கொல்லங்கோடு நகராட்சிக்கு கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    குழித்துறை நகராட்சி கருங்கல், பாலப்பள்ளம், புதுக்கடை, கிள்ளியூர், கீழ்குளம், பளுகல்,  இடைக்கோடு, பாகோடு, உண்ணாமலைக்கடை, நல்லூர், களியக்காவிளை, பேரூராட்சிகளுக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  மையங்களில் சி.சி.டி.வி.காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு வசதியாக  கம்புகள் கட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×