என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. நாளை பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க .மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை (16-ந் தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். மாலை 5 மணிக்கு அஞ்சுகிராமம் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து மயிலாடி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இரவு 8 மணிக்கு நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெறும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் 52 வார்டு வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இந்த தகவலை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
Next Story






