என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் தபால் வாக்கு பெட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு
வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி மூடி சீல் வைத்து பூட்டப்பட்டது.
பல்லடம்:
தமிழகத்தில் வருகிற 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி தேர்தலில், சுமார் 300 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் போலீசார் ஈடுபடுகின்றனர். தபால் வாக்கு அளிக்கும் வகையில் அவர்களுக்கு விண்ணப்பம்,வாக்குச் சீட்டு உள்ளிட்டவை அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகளை பெறும் வகையில் தபால் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டது. இதனை வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி மூடி சீல் வைத்து பூட்டப்பட்டது. பல்லடம் நகராட்சிக்கான தபால் வாக்குகளை இந்த பெட்டியில் நேரடியாக வரும் 21-ந்தேதி மாலை 6 மணி வரை செலுத்தலாம்.
வாக்குப் பெட்டியில் போடப்படும் தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை துவங்கும் நாளில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தபால் வாக்கு பெட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story






