என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்கி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19-ந்தேதி விடுமுறை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு வருகிற 19-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த நாளில் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
எனவே தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு வருகிற 19-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகளுக்கு விடுமுறை கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... மேகதாது அணை திட்டம் - தமிழகத்தின் எதிர்ப்பில் நியாயமில்லை என்கிறார் தேவகவுடா
Next Story