என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஏரி, குட்டையை மீட்டெடுக்க குழு அமைப்பு

    3 குழுக்களை அமைக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில் குழு செயல்படும்.
    திருப்பூர்:

    ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஏரி, குட்டையை மீட்டெடுக்க மாநில அளவில், கோட்ட அளவில், மாவட்ட அளவில் என 3 குழுக்களை அமைக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில் குழு செயல்படும். 

    இக்குழுவில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை, வீட்டு வசதித்துறை, டி.ஜி.பி., மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், நீர்வளத்துறை முதன்மை இயக்குனர், நில அளவை இயக்குனர் உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ளனர்.

    கோட்ட அளவில் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., நகராட்சி கமிஷனர், தாசில்தார், நீர்வளத்துறை உபகோட்ட அலுவலர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், நில அளவை ஆய்வாளர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு செயல்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கலெக்டர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இக்குழு எஸ்.பி., போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர், பேரூராட்சி உதவி இயக்குனர், நில அளவை இயக்குனர், அனைத்து வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் உறுப்பினராக இருப்பர். 

    இந்த குழு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியை துவங்க வேண்டும். மாதம் ஒருமுறை இந்த குழு கூட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் எவ்வளவு ஏரி, குட்டை உள்ளது. 

    அவற்றில் எவை எவை பயன்பாட்டில் உள்ளன. எவை முற்றிலும் ஆக்கிரமிப்பால் காணாமல் போயுள்ளன என்பதை குழுவினர் கள ஆய்வு நடத்தி, கண்டறிந்து மீண்டெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். 

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் குழு அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×