என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
விசைத்தறியாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம்
கூட்டத்தில் மாணிக்காபுரம் பகுதி விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் மாணிக்காபுரம் பகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் பாலாஜி வரவேற்றார். இதில் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது குறித்தும் கூலி உயர்வு பெறும் வரை போராட்டத்தைத் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு போராட்டத்திற்கு, சொந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், வேட்டி,சேலை உற்பத்தியாளர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு கேட்பது, கூலி உயர்வு போராட்டம் முடியும் வரை கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாணிக்காபுரம் பகுதி விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






