என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி மேலக்கொல்லையில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்ற போது எடுத்த படம்.
ஆலங்குடியில் வடமாடு மஞ்சு விரட்டு
ஆலங்குடி மேலக்கொல்லையில் வடமாடு மஞ்சு விரட்டு நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி மேலக்கொல்லை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
நிகழ்ச்சியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய வடமாடு மஞ்சு விரட்டு மாலை 4 மணி வரை நடை பெற்றது.
இந்த மஞ்சுவிரட்டை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். மஞ்சு விரட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
Next Story






