என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் படுத்தப்படும் பணி நடைபெற்றது.
    X
    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் படுத்தப்படும் பணி நடைபெற்றது.

    திருப்பத்தூர் நகராட்சியில் வருகிற 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களில் நோட்டா கிடையாது கட்டாயம் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சியில் வருகிற 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

    நகராட்சியில் உள்ள 36 வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தம்164, வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    வாக்காளர்கள் ஓட்டு போட 75 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக 75 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சின்னங்கள் பொருத்தும் பணி திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்த படுவதை வேட்பாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தங்களது சின்னம், பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என பார்வையிட்டனர், பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு சீல் வைக்கப்படுகிறது.எனவும் தங்களது ஓட்டு பதிவாகிய தானென்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.

    இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஜெயராமராஜா கூறியதாவது:-

    திருப்பத்தூர் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு சின்னங்கள் பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டாவிற்கு ஓட்டு போடும் முறை கிடையாது யாருக்காவது ஒருவருக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடும் பூத்தில் 1200 க்கு மேல் உள்ள ஓட்டுகளு ஒரு பூத் விதம் அமைக்கப்படும்.

    மேலும் 1200 மேல் உள்ள பூத்துக்கள் ஆண்கள், பெண்கள், என பிரிக்கப்பட்டு தனித்தனி பூத்துகளாக அமைக்கப்படும், சட்டமன்ற தேர்தலில் விவிபேட் யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற சீட்டு மெஷினில் இருக்கும்.

    பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பிரபஞ்சத்தில் உள்ள வாக்குச்சீட்டு சரியானதாக உள்ளதா என்றும் சில மெஷின்கள் மூலம் சரிபார்க்கப்படும் தற்போது அந்த வசதி கிடையாது என்றார்.
    Next Story
    ×