search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வீட்டு மனைகளை விற்க போலி தடையின்மை சான்றிதழ் தயாரித்த அரசு அலுவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போலி தடையின்மை சான்றிதழ் தயாரித்த அரசு அலுவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் கருப்பையா (வயது 52). இவர், இதற்கு முன்பு புகழூர்  பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த போது, செம்படாபாளையத்தை சேர்ந்த சுப்பையன் என்பவர், தனது நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்க தடையின்மை சான்று வழங்க கருப்பையாவை அணுகியுள்ளார். 

    அதற்கு கருப்பையா, சட்டத்திற்கு புறம்பாக சான்று வழங்க முடியாது என கூறியுள்ளார். பின்னர், கருப்பையா பணி மாறுதலில் நங்கவரம் சென்ற பிறகு, அவரது கையெழுத்தை போட்டு போலியாக தடையின்மை சான்று தயார் செய்து, அந்த இடத்தை புகழூர் பேரூராட்சி செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன் வாங்கியது தெரியவந்தது. 

    இதையறிந்த கருப்பையா, வருவாய்த்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் 18&ந் தேதி கருப்பையா வீட்டில் இருந்தபோது, புகழூர் பேரூராட்சி செயலாளர் உள்ளிட்டோர் அங்கு சென்று. புகாரை திரும்பப் பெற வேண்டும் என கருப்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கருப்பையா அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழங்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதன் பின்னர் இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. விசாரணையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரவீன், புகழூரில் பணியாற்றியபோது, அவரும், அலுவலக உதவியாளர் வடிவேலுவும் சேர்ந்து கருப்பையாவின் கையெழுத்தை போட்டு தடையின்மை சான்று  தயார் செய்து விவேகானந்தனிடம் அளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து பிரவீன், வடிவேலு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்£புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.ப.சுந்தரவடிவேலு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×