என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பா.ஜ.க. நிர்வாகி கைது

    வாலிபரை தாக்கிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி :

    திருச்சி இ.பி. ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

     திருச்சி வடக்கு தாரநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதாசிவம். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், இ.பி. ரோட்டில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். 

    அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 47). இவர் திருச்சி மாவட்ட பா.ஜ.க. எஸ்.டி .பிரிவு தலைவராக உள்ளார். இருவரும் இ.பி ரோடு வேதாத்திரி நகர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தனர். 

    அப்போது இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது . இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் சதாசிவத்தை தாக்கினார். இதில் காயம் அடைந்த சதாசிவம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். 

    மேலும் சதாசிவம் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.
    Next Story
    ×