என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி 29-வது வார்டில் பாரதிய ஜனதா சார்பில் மீனாதேவ் போட்டியிடுகிறார். இவர் அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.17 லட்சத்து 69 ஆயிரத்து 725 இருப்பதாக கூறி உள்ளார். தனது கணவர் பெயரில் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 645 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்துகளாக சுய சம்பாத்திய சொத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இருப்பதாகவும் தனது கணவர் பெயரில் பரம்பரை சொத்துக்கள் ரூ.9 கோடி 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி 49 லட்சத்து 30 ஆயிரத்து 371 ஆகும் என தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட் சியில் 11-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மகள் ஸ்ரீலிஜா போட்டியிடுகிறார். அவர் அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.1 கோடி 18 லட்சத்து 35 ஆயிரம், கணவர் பெயரில் ரூ.37 லட்சத்து 95 ஆயிரத்து 27, 3 குழந்தைகள் பெயரில் ரூ.28 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்துகள் தனது பெயரில் ரூ.27 லட்சத்து 12 ஆயிரத்து 526 மதிப்பிலும், கணவர் பெயரில் ரூ.47 லட்சத்து 70 ஆயிரத்து 449 மதிப்பிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுய சம்பாத்திய சொத்துக்கள் உள்பட தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடி 98 லட்சத்து 35 ஆயிரம் எனவும், கணவர் பெயரில் ரூ.1 கோடி 57 லட்சத்து 95 ஆயிரத்து 27 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.3 கோடி 84 லட்சத்து 30 ஆயிரத்து 27 என வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வக்கீல் ஆர்.மகேஷ் அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.39 லட்சத்து 30 ஆயிரத்து 812 இருப்பதாகவும், மனைவி பெயரில் ரூ.57 லட்சத்து 54 ஆயிரத்து 396 இருப்பதாக வும், மகள் பெயரில் ரூ.94 லட்சத்து 96 ஆயிரத்து 252 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுய சம்பாத்திய சொத்துக்கள் தனது பெயரில் ரூ.60 லட்சம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.38 லட்சம் மதிப்பிலும் இருப்பதாக கூறி உள்ளார். அந்த வகையில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடி 89 லட்சத்து 71 ஆயிரத்து 460 என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சி 11-வது வார்டில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகின்ற திவ்யா அசையும் சொத்ததாக தனது பெயரில் ரூ.26 லட்சத்து 10 ஆயிரத்து 493 இருப்பதாகவும், கணவர் பெயரில் ரூ.5 லட்சத்து 28 ஆயிரத்து 583 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை சொத்தாக தனது பெயரில் ரூ.1 கோடி 51 லட்சத்து 30 ஆயிரத்து 500 இருப்பதாகவும், தனது கணவர் பெயரில் ரூ.47 லட்சத்து 28 ஆயிரத்து 19 இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் தனது மொத்த சொத்து மதிப்பாக ரூ.2 கோடி 29 லட்சத்து 97 ஆயிரத்து 595 இருப்பதாக வேட்பு மனுவில் கூறி உள்ளார்.
Next Story






