என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
வேளச்சேரியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது
வேளச்சேரி சசிநகர் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க.வினர் 2 பேரை அ.தி.மு.க.வினர் பிடித்து பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரி 176-வது வார்டில் தி.மு.க. சார்பில் ஆனந்தம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக மூர்த்தி போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் வேளச்சேரி சசிநகர் பகுதியில் அ.தி.மு.கவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தி.மு.கவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக கவர்களில் பணம் போட்டு வைத்திருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சுகுமார், வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். உடனடியாக பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் அங்கு வந்தார்கள்.
அவர்களிடம் அ.தி.மு. க.வினர் இருவரையும் தி.மு.கவினர் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இருவரையும் வேளச்சேரி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் ஒவ்வொரு கவர்களிலும் ரூ.1000 பணம் இருந்தது தெரியவந்தது. இது போன்று சுமார் 10 கவர்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






