என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பெண்களை கிண்டல் செய்த 2 வாலிபர்கள் கைது
புதுவை காந்திவீதியில் பெண்களை கிண்டல் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களில் சிலர் அரைகுறை ஆடையுடன் புதுவை நகரில் வலம் வருகிறார்கள்.
காதலர் தினத்தையொட்டி ஏராளமான வெளிமாநில காதல் ஜோடிகள் காதலர் தினவிழாவை கொண் டாட புதுவையில் குவிந்துள் ளார்கள்.
இந்த நிலையில் புதுவை காந்தி வீதியில் வெளிமாநில பெண் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் அந்த பெண்களை கிண்டல் செய்தனர்.
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட ஓதியஞ்சாலை போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசார ணையில் அவர்கள் உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்த கனி(வயது31) மற்றும் புதுவை ஜீவாநகரை சேர்ந்தர் சுனில்(21) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்-ஒதியம் பட்டு ரோடு சந்திப்பில் நேற்று நள்ளிரவு 2 வாலிபர்கள் நின்றுக்கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்த அம்பேத்குமார்(28) மற்றும் உத்திரவாகினிபேட் பள்ளத்தெருவை சேர்ந்த ராஜன்(24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






