என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயல் விளக்கம் செய்து காட்டிய கல்லூரி மாணவர்கள்
ஊட்டச்சத்து டானிக் செலுத்துவது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டிய கல்லூரி மாணவர்கள்
ஊட்டச்சத்து டானிக் செலுத்துவது எப்படி? என கல்லூரி மாணவர்கள் தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் வட்டாரத்துக்கு உட்பட்ட விஜயநகரி கிராமத்தில் வடக்கன்குளம் இந்தியன் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தென்னை மரத்துக்கு ஊட்டச்சத்து டானிக் செலுத்தும் முறை பற்றி விவசாயிகளுக்கு தென்னந் தோப்புகளில் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.
விவசாயிகளிடம் அதன் பயன்களையும் எடுத்து கூறினார்கள். அப்போது விவசாயிகளிடம் தென்னை ஊட்டச்சத்து டானிக் என்பது தென்னைக்கு வேர் மூலம் ஊட்டுவதற்கு உகந்ததாகும் என்றுஅந்த கல்லூரி மாணவர்கள் விளக்கினார்கள்.
மேலும் இந்த தென்னை ஊட்டச்சத்து டானிக்கில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன இன்றும் விவசாயிகளிடம் அவர்கள் கூறினார்கள்.
அத்துடன் மரத்துக்கு தேவையான ஆக்ஸிஜன், சாலிசிலிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்கள்.
இந்த டானிக் மரத்துக்குள் சென்றுமரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல், மரத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரம் இன்றி தருகிறது.
எனவே மரத்திற்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை சரியான விகிதத்தில் நேரடி யாக மரத்துக்குள் செலுத்த முடிகிறது என்றும் மேலும் மரத்தில் நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றுக்கு இயற்கை யான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது என்றும்,
மரத்தில் குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி காய் பிடிப்பு திறனை அதிகரிக்க செய்கிறது என்றும் வேர் மூலம் ஊட்டச்சத்து மரத்திலிருந்து 2 முதல் 3 அடி தள்ளி சுமார் 4 அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும் என்றும்,
இந்த பகுதியில் பென்சில் கனமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பின் வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாக சீவி விடவேண்டும் என்றும்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.
பின்னர் டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டி விடவும். இதை 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.
ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவைப்படும் என்றும் ஊட்டச்சத்து டானிக் அளிப் பதன் மூலம் தென்னையில் விளைச்சலை அதிகப்படுத்தி லாபம் ஈட்ட முடியம் என்றும் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் செய்து இருந்தார்.
Next Story






