என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதல்- 4 வாலிபர்கள் படுகாயம்
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்தது குறித்து மறைமலைநகர் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை. இவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வேலைக்காக 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர்.
மறைமலை அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென 2 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிகண்டன், செல்வம், சகாதேவன், ஏழுமலை ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story