என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்ட காட்சி.
வேலூரில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம்
வேலூர் மாநகராட்சியில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளனர்.
மீதமுள்ள 58 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க உள்பட 354 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.
மாநகராட்சியில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 208 ஆண்கள் 215001 பெண்கள் திருநங்கைகள் 46 என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் ஓட்டு போட தேவையான பூத் சிலீப் இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வேலூர் மாநகராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகம் செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து அவர்கள் பூத் சிலிப் வழங்கினர். பூத் சிலிப்பில் வாக்காளர் விவரம் எண், ஓட்டு போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம் போன்றவை அச்சிடப்பட்டுள்ளது.
2 நாட்களுக்குள் அனைத்து வார்டுகளிலும் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவு பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






