என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் வாக்காளர் பெயர், சின்னத்துடன் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தயார்
வேலூர் மாநகராட்சியில் வாக்காளர் பெயர், சின்னத்துடன் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 419 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஓட்டுப்பதிவு எந்திரம் பயன் படுத்தப் படவுள்ளது. மொத்தம் 354 பேர் போட்டியிடுகின்றனர் இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
அப்போது பேட்டரிகள் பழுதடைந்த எந்திரங்களில் புதியதாக பேட்டரி மாற்றப்பட்டது.
இந்த பணி இன்றுடன் நிறைவு பெற்றது. அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராகிவிட்டன.
இந்த எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் அனைத்து எந்திரங்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






