என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வேலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 628 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 91 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் பதட்டமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் பிரதாப் இன்று ஆய்வு செய்தார்.
காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான வசதிகள் செய்திருக்க வேண்டும். மின்வசதி சரியான அளவில் இருக்க வேண்டும். மின்சார வசதி குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு பாதைகள் முறையாக அமைக்க பட்டு உள்ளதா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.
மேலும் அவர் கூறுகையில்:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது பெரிய அளவில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது 91 வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதம் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெப்கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story






