என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவன் கைது
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரிர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் கைது செய்யப்பட்டான்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரிக்கு சென்றபோது இரும்பு கடையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவரம் தெரியவந்ததும் மாணவியை பெற்றோர் கண்டித்தனர்.
இந்த நிலையில் கடந்த 10ந்தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து தெரிவிப்பதற்காக அவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது, 17 வயது சிறுவனின் பெற்றோர் மாணவியை அங்கு அழைத்து வந்திருந்தனர்.
பின்னர் மாணவியை அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, 17 வயது சிறுவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
அதன் அடிப்படையில் மாணவியின் தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
Next Story






