என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.1.50 லட்சத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த காட்சி.
செய்யாறில் 1.50 லட்சம் பறிமுதல்
செய்யாறில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செய்யாறு:
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 9 மணி அளவில் துணை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் இந்தோ அமெரிக்கன் பள்ளி அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது.
காரில் வந்தவர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா கொசவன் புதூரை சேர்ந்த சுரேஷ் வயது 38, என்பதும் அவர் கலவை வெடிப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து வந்ததால் ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Next Story






