என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது
மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல்
திருப்பத்தூரில் மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் 18 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான சின்னத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.
முன்னதாக மின்னணு எந்திரம் சரி பார்க்கப்பட்டு வட்டார தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சின்னத்தை பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மன்சூர் அலி, காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரேணுகாதேவி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வேட்பாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.
Next Story






