search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறையில் இருந்து விடுதலையான சகாயமேரி (சுடிதார் அணிந்திருப்பவர்).
    X
    சிறையில் இருந்து விடுதலையான சகாயமேரி (சுடிதார் அணிந்திருப்பவர்).

    மாணவி தற்கொலை விவகாரத்தில் கைதான விடுதி காப்பாளர் விடுவிப்பு

    அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விடுதி காப்பாளர் சகாயமேரி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    திருச்சி:


    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. இவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    அந்த விடுதி வார்டன் சகாயமேரி மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாற சொன்னதாகவும், அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் அவரை கொடு மைப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. 

    இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி, கடந்த 9-ந்தேதி விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு  முயன்றதாக புகார் கூறப்பட்டது. 

    இந்தநிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியின் தற்கொலையை தொடர்ந்து, அப்பள்ளியின் விடுதிக் காப்பாளர் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி பெண்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
    Next Story
    ×