என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.1.50 லட்சத்தை இழந்த வாலிபர்

    செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.1.50 லட்சத்தை இழந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரங்கோஜி பாவா தெருவை சேர்ந்தவர் காளிதாசன் (வயது38) இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது கைப்பேசிக்கு கடன் தருவதாக மர்ம நபர்களிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. 

    இதனை பார்த்த காளிதாசன், தனக்கு 3 லட்சம் கடன் தொகை வேண்டும் என பதில் தகவல் அளித்துள்ளார். உடனே தாங்கள் விரித்த வலையில் காளிதாசன் மாட்டிக்கொண்டார் என அறிந்த மர்ம நபர்கள், அவரிடம் போன் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பிபிஒ சென்டர்போல் பல எண்களிலிருந்து பெண்கள் பேசி அவரை நம்ப வைத்துள்ளனர்.
     
    மேலும் உங்களுக்கு 3 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்றால் உடனடியாக டாக்மென்ட் செலவிற்காக ரூ.3500 பணம் அனுப்புமாறு ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பியுள்ளனர். பல எண்களிலிருந்து பெரிய நிறுவனம் போல் பேசியதால் உண்மையிலேயே கடன் கொடுக்கும் நிறுவனம் என நம்பிய காளிதாசன் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளார். 

    அதனையடுத்து மர்ம நபர்கள் இன்சூரன்ஸ் தொகை, பணப் பறிமாற்றம், ஸ்டாம்ப், தரகர் தொகை என மொத்தம் ஒன்றரை லட்சம் வரை காளிதாசனிடம் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த காளிதாசன், ஆன்லைன் மூலம் சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.  

    புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் கடன் தருவதாகக்கூறி ஒன்றரை லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ள  சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×