என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிறு சாகுபடி நுட்பங்கள் அடங்கிய பிரசுரங்கள் வெளியிட்ட போது எடுத்த படம்.
விவசாயிகளுக்கு பயிறு உற்பத்தி பெருக்கம் செயல்விளக்க பயிற்சி.
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு பயிறு உற்பத்தி பெருக்கம் செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் வம்பன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில், உலக பயறு தினம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த பயிற்சி¢வேளாண்மை இணை இயக்குநர்சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் திருவரங்குளம் வெற்றிவேல் பயறு உற்பத்தியை பெருக்கிட வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளங்கி கூறினார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திருப்பதி பயறு தேவை மற்றும் உற்பத்தியை பெருக்கி தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்க மளித்தார். வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் பேசுகையில், மாவட்டத்தில் பயறு உற்பத்தியை பெருக்கிட செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்து திட்டங்கள் மற்றும் சாகுபடி நுட்பங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், வம்பன் பயறு ரகங்களின் சிறப்பியல்புகள் மற்றும் சாகுபடி நுட்பங்களான விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ராசாயன உரங்கள், நுண்ணூட்டம் இடுதல், டி.ஏ.பி தெளிப்பு முதலியவற்றை விளக்கினார்.
வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் பயறு சாகுபடி நுட்பங்கள் அடங்கிய மூன்று பிரசுரங்களை வெளியிட்டு நிறைவுரை ஆற்றினார். அப்போது மண்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சரிவிகித உணவில் பயறு வகைகளின் பங்கு, பயறு தேவை மற்றும் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளக்கினார்கள்.
கருத்துக்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது. டி.ஏ.பி தெளிப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. பயிற்சியில் ராசியமங்களம், சுற்றுப்புற விவசாயிகள் மற்றும் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Next Story






