என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கோட்டை அகழியில் குதித்து சாவு

    வேலூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கோட்டை அகழியில் குதித்து பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் காகிதப்பட்டறை முனிசிபல் காலனியை சேர்ந்த ராஜிவ் என்பது தெரியவந்தது. வேலூர் தனியார் ஆஸ்பத்திரிகளில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த ராஜுவ் கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×