என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்த காட்சி.
வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
குடியாத்தம் நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
குடியாத்தம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 820,பெண் வாக்காளர்கள் 44 ஆயிரத்து 605, மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 85 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர்.
36 வார்டுகளில் வாக்களிக்க 31மையங்களில் 91 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு ஒரு திருநங்கை உட்பட 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
குடியாத்தம் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.திருநாவுக்கரசு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சிசில்தாமஸ், வி.முருகானந்தம், கே.பாலச்சந்தர், கே.சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பொது முகவர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கியது.
பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் வல்லுநர்கள் மனிஷ்குமார், சுனில்குமார், சஞ்சய், வாக்ஹி உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்தனர். அதன் பின்னரே வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
Next Story






