என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பாளின் திருவுருவம், பக்தி பரவசம்
சிக்கல் பார்வதீஸ்வரர்கோவிலில் நெய்க்குள தரிசன வழிபாடு
தை கடைசி வெள்ளியையோட்டி சிக்கல் பார்வதீஸ்வரர்கோவிலில் நெய்க்குள தரிசன வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்:
தை கடைசி வெள்ளியையொட்டி நாகை மாவட்டம், சிக்கல் பர்வதவர்த்தனி உடனுறை பார்வதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு அன்னப்பாவாடை என்னும் நெய்க் குளத் தரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
15 கிலோ சர்க்கரை பொங்கலில் 25 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு பிரசாதத்தில் நெய் குளம் போல் காட்சி அளிக்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அக்குளத்தில் தெரிந்த அம்பாளின் திருவுருவத்தை கண்டு பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story






