என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தேர்தல் பிரசார கூட்டத்திற்கு இடங்கள் அறிவிப்பு

    பெரம்பலூரில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வானொலி திடல், தேரடி வீதி, அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பாலக்கரை, குரும்பலூர் பேரூராட்சிக்குட்ட சிவன் கோயில் முன்பு லப்பைக்குடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், 

    பூலாம்பாடி பேரூராட்சிக்குட்ட மந்தை வெளி ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெற்று கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×