என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதி வழியாக பள்ளிக்கு நடந்து சென்ற மாணவ-மாணவிகள்
போக்குவரத்து நெரிசலால் டவுன் பஸ் வரவில்லை - 5 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள்
பண்ணாரிக்கு பஸ் வராததால் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 5 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து வந்து வடவள்ளி பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
சத்தியமங்கலம்:
பண்ணாரி பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் டவுன் பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் பண்ணாரி சோதனை சாவடியில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் டவுன் பஸ் வடவள்ளி என்ற பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.
பண்ணாரிக்கு பஸ் வராததால் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 5 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து வந்து வடவள்ளி பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மாணவ- மாணவிகள் கூறும்போது, இன்று திருப்பு தேர்வு நடைபெறுகிறது. எனவே பஸ் இல்லாததால் தேர்வுக்கு தாமதமாகி விடும் என்று பதற்றத்துடன் நடந்து வந்தோம். எங்களுக்கு பள்ளிக்கு சென்றுவர வழக்கம்போல் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.
Next Story






