என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பெரம்பலூரில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காணாமல் போன செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நடை பெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இது வரையில் 35 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாகவும், ஆன்லைன் மூலம் பணமோடி குறித்து புகார்கள் கொடுத்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் எஸ்பி மணி தலைமையில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பொறுப்பு ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில், எஸ்ஐ க்கள் மனோஜ், சிவமீனா மற்றும் ஏட்டு சதீஷ்குமார், போலீஸ்காரர்கள் முத்துசாமி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தி காணாமல் போன செல்போன்கள் மற்றும் இணையதள மோசடிகளால் இழந்த பணத்தை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன் மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் எஸ்.பி. மணி தலைமை வகித்து மீட்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 25 ஸ்மார்ட் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், இணைய வழி மூலம் பொருட்கள் விற்பதாகவும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைமோசடி மூலமும் பணத்தை இழந்த 4 பேருக்கு அவர்கள் இழந்த தொகை ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பொறுப்பு ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில், எஸ்ஐக்கள் மனோஜ், சிவமீனா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story






