என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம்
    X
    சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம்

    சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 21ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, சமூக ஆர்வலர் சிங்கபாஸ்கரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், 16ம் தேதி திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 21ம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×