என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 170 பதவிகளுக்கு, 827 பேர் போட்டி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாந கராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெல மங்கலம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    8 நகர்புற உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட 1,181 பேர்  மனுத் தாக்கல் செய்தனர். இதில், 50 மனுக்கள் திரும்ப பெற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனுத் திரும்ப பெற கடைசி நாளான நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 295 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.  இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

    அதன்படி ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 379 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 85 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தற்போது 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு 274 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 264  பேர் மனுத்தாக்கல் செய்தனர். 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 81 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தற்போது 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு 170 பேர் போட்டியிடுகின்றனர்.

    பர்கூர் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 95 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 6 மனுக்கள் தள்ளுபடி, 32 பேர் மனுக்களை திரும்ப பெற்றதால், 57 பேர் போட்டியிடுகின்றனர். இதே போல், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 104 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 5 மனுக்கள் தள்ளுபடியும், 26 பேர் மனுக்கள் திரும்ப பெற்றதாலும், ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், 17 வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 பேர் போட்டியிடுகின்றனர்.

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 95 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 8 மனுக்கள் தள்ளுபடியும், 37 பேர் மனுக்களை திரும்ப பெற்றதால், 50 போட்டியிடுகின்றனர்.

    ஊத்தங்கரை பேரூராட் சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 92 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால், 87 பேர் போட்டியிடுகின்றனர். கெலமங் கலத்தில் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 78 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 மனுக்கள் தள்ளுபடியும், 11 பேர் மனுக்கள் திரும்ப பெறப்பட்டதால், 64 பேர் போட்டியிடுகின்றனர்.

    நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 74 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 மனுக்கள் தள்ளுபடியும், 18 பேர் மனுக்கள் திரும்ப பெற்றதால், 53 பேர் போட்டியிடுகின்றனர்.  அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகின்றனர்.

    Next Story
    ×