என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன தணிக்கையை கோட்டாட்சியர் ஆய்வு
பறக்கும் படையினருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்ட கோட்டாட்சியர்
சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினருடன் வாகன தணிக்கையில் கோட்டாட்சியர் ஈடுபட்டார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. சீர்காழி நகராட்சியில் உள்ள 24வார்டுகளில் போட்டியிட பல்வேறு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனிடையே வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் நகரின் எல்லைபகுதிகள், பிரதான பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் சட்டவிரோதமாக கொடுக்கப் படுவதை தடுக்க தீவிர தணிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் நடந்த வாகன தணிக்கையின்போது கோட்டாட்சியர் நாராயணன் நேரில் சென்று அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து ஆய்வுசெய்தார்.
Next Story






