search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்  பதவிக்கு மல்லுகட்டும் கோடீஸ்வரர்கள்

    சென்னை மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்காக போட்டியிடுபவர்களில் பலர் கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது சொத்து விபர பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டு கேட்டு தெருக்கோடிகளுக்கு வருபவர்களில் பலர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

    சென்னை மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்காக போட்டியிடுபவர்களில் பலர் கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது சொத்து விபர பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. சில வேட்பார்கள் மற்றும் அவர்களது மனைவி பெயரில் ரூ.20 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளது.

    சோழிங்கநல்லூர் 184-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் அவரது பெயரில் ரூ.18.45 கோடியும், மனைவி பெயரில் ரூ.2.16 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.எம்.ஜானகிராமன் ரூ.6.4 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    182-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கே.சத்தீஸ்குமாருக்கு ரூ.6.10 கோடியும் மனைவி பெயரில் ரூ.2.29 கோடியும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    7-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ரூ.8 கோடி சொத்துகள் உள்ளது.

    89-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டருக்கு ரூ. 2.31 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.

    சவுகார்பேட்டையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் ஜெயினுக்கு ரூ.2 கோடிக்கு சொத்து இருக்கிறது.

    189-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பள்ளிக்கரணை பாபுவுக்கு ரூ.5.5 கோடி சொத்தும் 110-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அபிசேக் ரெங்கசாமிக்கு ரூ.5.3கோடி சொத்துக்கள் உள்ளது.

    கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்தான்.

    அதே நேரம் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சிகளில் ஒரு சிலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

    Next Story
    ×