என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
சுபமுகூர்த்த நாள் என்பதால் தருமபுரி பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
தருமபுரி பூ மார்க்கெட்டில் சுபமுகூர்த்த நாள் என்பதல் பூ வாங்க மக்கள் குவிந்தனர்.
தருமபுரி:
தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாக காணப்பட்டது.
கோவில் தலங்கள், குலதெய்வ வழிப்பாடு, திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, மற்றும் சுபகாரியங்களுக்கு பூக்கள் அதிகமாக தேவைப்படுவதால் பூக்களின் விற்பனை களைகட்டியது.
பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்று தருமபுரி பூ மார்க்கெட்டில் சாமந்திப்பூ 120 ரூபாயில் இருந்து 140 ரூபாய்க்கும், சம்பங்கி 60 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கும், அலரி 100 ரூபாயில் இருந்து 140 ரூபாய்க்கும், குண்டுமல்லி 1000 ரூபாய்க்கும், காக்கனாம் பூ 280 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 100 மற்றும் 120 ரூபாய்க்கும், சம்பங்கி 100 ரூபாய்க்கும், செண்டுமல்லி 20 ரூபாய்க்கும் விற்பனையானது.
Next Story






