என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி உழவர் சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
தருமபுரி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை சரிவு
தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை வரத்து அதிகரிப்பால் சரிந்துள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் பெரும் அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டை, முருங்கை பீர்க்கங்காய், அவரை, துவரை, உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் அரைக்கீரை, சிறுகீரை, வெந்தியக்கீரை, பசலைக்கீரை, உள்ளிட்ட அனைத்து வகை கீரை வகைகளும் கேரட், பீன்ஸ், கோஸ், காலிபிளவர் என காய்கறி வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு வெளியூரில் இருந்து காய்கறிகள் அதிகம் வந்துள்ளது. இதனால் விலை சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் மாவட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகமாக காணப்படுவதாலும் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது.
இன்று தக்காளி 14 ரூபாய்க்கும், கத்தரி 26 ரூபாய்க்கும், வெண்டை 20, ரூபாய்க்கும், அவரை 35 ரூபாய்க்கும், முள்ளங்கி 6 ரூபாய்க்கும், முருங்கை கிலோ 280 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






