என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை படத்தில் காணலாம்.
உடன்குடி சாலையில் மாடுகள் தொல்லை
உடன்குடி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி நகரப்பகுதிக்குட்பட்ட மெயின் பஜார் 4 சந்திப்புசாலை, பஸ் நிலையம், சந்தையடி தெரு, சத்தியமூர்த்திபஜார், வில்லிகுடியிருப்பு சந்திப்பு ஆகிய பகுதிகளில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில்வருபவர்கள் மாடுகளின் மீது மோதிவிழுவதும், படுகாயமடைவதும் பரிதாபமாக உள்ளது. இதனால் சாலையில் நடமாடும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story






