என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுகூட்டம்
உள்ளரங்கு பொதுக்கூட்டம்
20 பேர் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் வீடு வீடாக சென்று பங்கேற்கலாம், உள்ளரங்கு பொதுக்கூட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு மிகாமல் நடத்தலாம் என்று விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு அனுமதியும், தடையும் விதித்து வழி காட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள், மோட்டார் சைக் கிள்கள் ஊர்வலம் ஆகியவை இந்த மாதம் 11ந்தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற் கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரை வழங்கும்.
அரசியல் கட்சிகளின் ஊர்வலம் குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் இந்த மாதம் 11&ந்தேதி வரை அனுமதிக்கப்படமாட்டாது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற் கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கும். எனினும் பிரசாரத்தின்போது மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் முன் அனுமதி பெற்று கொரோனா தடுப்பு விதி முறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரால் தேர்ந்தெடுக்கப்படும் திறந்தவெளி மைதானங் களில் அதிகபட்சம் ஆயிரம் பேர் பங்கேற்பாளர்கள் அல்லது மைதானத்தின் கொள்ளளவிற்கு 50 சதவீதத் திற்கு மிகாமல், இதில் எது குறைவோ அதற்கு அனுமதி பெற்று திறந்தவெளி பொதுக்கூட்டம் நடத்தலாம்.
சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் சான்று பெற்று அதிகபட்சம் 500 பேர் பங்கேற்பாளர்கள் அரங்கின் கொள்ளளவிற்கேற்ப 50 சதவீதத்துக்கு மிகாமல் உள் ளரங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். பாதுகாப்பு பணியா ளர்களை தவிர்த்து 20 பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளலாம். மேலும் கடந்த டிசம்பர் 10ந்தேதி மற்றும் ஜனவரி 25ந்தேதி வெளியிடப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






