என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தேன்கனிக்கோட்டை அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). சம்பவத்தன்று இவர் தேன்கனிக்கோட்டை அய்யூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் நவீன்குமாரை கத்தி முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1,580ஐ பறித்து சென்றனர். இது குறித்து நவீன்குமார் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (24), மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (22), அருண்குமார் (22), மஞ்சுநாத் (20) என தெரிய வந்தது- அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story






