என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் ஆய்வு மேற்கொண்ட காட்சி.
வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் ஆய்வு
வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, பாதுகாப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஓட்டுக்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் மாநகரில் வாக்குச்சாவடி மையங்கள் அமைய உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, பாதுகாப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
Next Story






