என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்

    இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி சரல்விளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி ஸ்ரீமதி (வயது 61). இவர்  பொருட்கள் வாங்குவதற்காக வில்லுக்குறி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீமதிக்கு வலது கையில் எலும்பு முறிவும் தலையில் பலத்த ரத்த காயமும் ஏற்பட்டது. 

    உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சில் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    சம்பவம் குறித்து அவரது மகள் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×