search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட 5451 மனுக்களில் 63 மனு தள்ளுபடி

    திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 68 மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டன.
    திருச்சி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
    திருச்சி மாநகராட்சியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 718 மனுக்களில் 711 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    மணப்பாறை, துவாக்குடி, துறையூர், முசிறி, லால்குடி ஆகிய 5 நகராட்சிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 676 மனுக்களில், 664 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பேரூராட்சிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 890 மனுக்களில், 885 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

    5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 2284 மனுக்களில் 2,260 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,328 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகளில் மொத்தம் 391 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 387 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதே போல் புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ண ராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூரா ட்சிகளில் மொத்தம் 589 வேட்பு மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டது. இதில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக் கப்பட்டு, 578 வேட்புமனுக்கள் ஏற்றக்கொள்ளப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட் டத்தில் 189 வார்டுகளுக்கு 1,114 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந் தன. அதில் புதுக்கோட்டை நகராட்சியில் 5, அறந்தாங்கி நகராட்சியில் 3, கீரனூர் பேரூராட்சியில் 4, இலுப்பூரில் 3, அன்னவாசலில் 2, ஆலங்குடி மற்றும் பொன்ன மராவதியில் தலா1 என மொத்தம் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 1,095 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

    பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 126 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 3 மனுக்கள் தள்ளு படி செய்யப்பட்டது. இறு தியாக 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து மாவட்டத்தில் இறுதியாக 359 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் 69 பதவியிடங்களுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 419 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அரியலூர் நகராட்சியில் 3 பேரின் மனுக்களும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 4 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    உடையார் பாளைம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 63 மனுக்களும், வரதரா ஜன்பேட்டை பேரூராட்சியில் 75 மனுக்களும் ஏற்றுக் கொள் ளப்பட்டன.
    Next Story
    ×