என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.

    நகரத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை புனிதராக போற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×